கிரிப்டோ கரன்சி என்ற வார்த்தையை நாம் சமீபகாலமாகக் கேட்டு வருகிறோம். இருப்பினும், இன்னும் நம்மில் சிலருக்கு இந்த கிரிப்டோ கரன்சி என்பது எப்படிச் செயல்படும் என்பதே தெளிவாக இல்லை. இன்னும் சிலருக்கு இந்த கிரிப்டோ கரன்சி நாணய வடிவத்தில் வருவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே இந்த கிரிப்டோ கரன்சி பணத்தை மக்கள் எப்படி பயன்படுத்தலாம்? இது எப்படிப் பணமாகச் செயல்படுகிறது? உலகளவில் இதற்கு எங்குச் சென்றாலும் மதிப்புள்ளது என்று கூறுகிறார்களே, இது உண்மையா? கிரிப்டோ கரன்சி என்றால் என்ன? முதலில் கிரிப்டோ கரன்சி என்றால் என்ன என்பதைப் பார்த்துவிடலாம். கிரிப்டோ கரன்சி என்பது மெய்நிகர் நாணயம் ஆகும். கிரிப்டோ கரன்சியானது டிஜிட்டல் முறையில் கிடைக்கும் பணமாக செயல்படுகிறது. கிரிப்டோ கரன்சி என்ற பெயர் குறிப்பிடுவது போல், இந்த கிரிப்டோ கரன்சி பயணமானது என்கிரிப்டெட் செய்யப்பட்ட தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படுவதாகும். இது டிஜிட்டல் பணம் என்றும் அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் டாலர் மற்றும் இந்தியாவின் ரூபாயை போல் இதற்கும் மதிப்புள்ளது.
1 பிட்காயின் இன் இந்திய மதிப்பு என்ன? கிரிப்டோ கரன்சி Bitcoin, Ethereum, Dogecoin, Litecoin, Ripple போன்று பல வகை பணமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் அதிக மதிப்பு எந்த கிரிப்டோ கரன்சிக்கு கிடைத்துள்ளது என்று பார்த்தால், அது பிட்காயினுக்கு தான் கிடைக்கிறது. இந்திய மதிப்பின் படி 1 பிட்காயின் என்பது ரூ. 38,00,627 சமமாகும். கிரிப்டோ கரன்சி மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையும் டிஜிட்டல் கையொப்பத்தால் சரிபார்க்கப்படுகிறது. இது டிஜிட்டல் பணம் என்பதனால், இது பாதுகாப்பானதா என்று கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கும். பூமி போல் செவ்வாய் கிரகத்திலும் இதே பிரச்சனையா? 5 கிமீ தூரத்திற்கு அதிக சேதம்.. நாசா வெளியிட்ட வைரல் புகைபடம் கிரிப்டோ கரன்சி என்பது உண்மையில் பாதுகாப்பானதா? உண்மையைச் சொல்லப் போனால், கிரிப்டோ கரன்சி என்பது மிகவும் பாதுகாப்பான நாணயம் தான் என்பதை முதலில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கிரிப்டோ கரன்சி முழுமையாக பிளாக் செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இது முழுமையாக என்கிரிப்ட்டு செய்யப்பட்ட நாணயம் என்பதனால் இதை பெறுபவர் மற்றும் அனுப்புபவர் மட்டுமே அணுக முடியும். இதனால் இதன் பாதுகாப்பைப் பற்றி மக்கள் பயப்படத் தேவையில்லை. மிகவும் விலை குறைவான கிரிப்டோ கரன்சியின் மதிப்பு எவ்வளவு? கிரிப்டோ கரன்சி என்பது நாம் முன்னர் சொன்னது போல இது ஒரு டிஜிட்டல் பணமாகும். இதனால், கிரிப்டோ கரன்சியை நோட்டுக்களாகவோ, நாணயமாகவோ அச்சடிக்க முடியாது. இருப்பினும் இதை நீங்கள் மிகவும் பாதுகாப்பான டிஜிட்டல் லாக்கரில் இவற்றை நீங்கள் சேமித்து வைத்துப் பாதுகாத்துக்கொள்ளலாம். எனவே, கிரிப்டோகரன்சியை அதன் அடிப்படை வடிவமான இணைய வடிவ வாயிலாக மட்டுமே பயன்படுத்த முடியும். கிரிப்டோகரன்சி விலை அதிகமானது என்று நினைத்துவிடாதீர்கள், இந்தியாவில் ரூ. 7.76 விலை முதல் கிரிப்டோ கரன்சி வாங்கக் கிடைக்கிறது. விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி குளிப்பார்கள் தெரியுமா? முழு வீடியோவை வெளியிட்ட பெண் விண்வெளி வீரர்.. உலகளவில் நீங்கள் எங்கெல்லாம் இந்த கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தலாம்? கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை மற்றும் தகவல்களை யாராலும் ஹேக் செய்யவோ, ஏமாற்றவோ முடியாது என்பதை மறக்காதீர்கள். இது தற்போது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிரிப்டோ கரன்சி சமீபத்தில் மக்களின் கூடுதல் நம்பிக்கையைப் பெற்றுவருகிறது என்று சமீபத்திய அறிக்கை முடிவுகள் தெரிவிக்கிறது. உலகளவில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் கிரிப்டோ கரன்சியை பயன்படுத்திக்கொள்ளலாம். இதை பொதுவான பணம் போல வருடத்தில் அனைத்து நாட்களும் பயன்படுத்தலாம்.

No comments